மத்தியப் பிரதேசத்தில் உள்ள தர் நகரத்தில் உள்ள முக்கிய தலமாக விளங்குகிறது பீத்தாம்புரா. இங்குள்ள தொழிற்சாலைகளுக்காக நன்கு அறியப்பட்ட இந்த இடம், ஆசியாவின் முதல் பெரிய தொழிற்சாலை நகரமாகும். இந்தூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் பல சிறிய மற்றும் பெரிய இந்திய மற்றும் வெளிநாட்டு தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த நகரம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஸ்பெஷல் எகனாமிக் சோன் (SEZ) என்ற ஒரு சிறப்பு பிரிவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு சில முக்கிய வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளதால், நம் நாட்டின் தானியங்கி மையம் என்றும் இந்த இடத்தை அழைப்பார்கள். வளரும் இந்தியாவின் புதிய முகமாக பீதாம்புரத்தை காட்டுகிறது தர் சுற்றுலா.



Click it and Unblock the Notifications