Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தார்சூலா » ஈர்க்கும் இடங்கள் » ஓம் பர்வதம்

ஓம் பர்வதம், தார்சூலா

11

இமயமலைத் தொடரில் 6191 மீ உயரத்தில் அமைந்துள்ள மலையாக ஓம் பர்வதம் அமைந்துள்ளது. இந்த மலைக்கு லிட்டில் கைலாஷ், ஆதி கைலாஷ், பாபா கைலாஷ் மற்றும் ஜோங்லிங்கோங் சிகரம் என்ற பெயர்களும் உண்டு.

'ஓம்' (OM) அல்லது 'அம்' (AUM) என்ற வடிவத்தில் பனி படர்நதிருக்கும் இந்த மலை இந்து, பௌத்தம் மற்றும் சமண மதங்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

இந்தோ-திபெத்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த மலையிலிருந்து பனி சூழ்ந்துள்ள அன்னபூர்ணா சிகரங்களை காண முடியும். ஆதி-கைலாய யாத்திரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் காளி நதியின் பிரம்மாண்டமான காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த கானகங்கள் மற்றும் நாராயண் ஆசிரமம் ஆகியவற்றையும் காண முடியும்.

இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்து, அதன் பிரதிபலிப்பு உருவத்தை காட்டும் வகையில் அமைந்துள்ள கௌரி குந்த் என்ற இடமும் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளத.

சாகச விரும்பிகள் இந்த பிரதேசத்தில் மலையேற்றம் செய்ய முடியும்; காளி நதியும், தௌலியும் இணையும் இடமாக இருக்கும் தவாகாட் தான் மலையேற்றம் தொடங்கும் மற்றும் முடியும் இடமாக இருக்கிறது.

அதிகமான நேரமிருக்கும் சுற்றுலாப் பயணிகள் மானசாரோவர் ஏரியைப் போலவே புனிதமானதாகக் கருதப்படும் ஜோங்லிங்கோங் ஏரிக்கும் சென்று வரலாம். இந்த இடத்திலிருந்து தெரியும் பர்வதி முஹார் மலைகள், சூரிய வெளிச்சத்தில் மிகவும் அற்புதமான தோற்றத்தினை தரவல்ல இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue