தர்மபுரி மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கோட்டை கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயில் வீற்றிருக்கும் சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் சிவபெருமானிடம் அருள்வரங்களைப் பெற ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த கோட்டை கோவில் ராமாயண நிகழ்வுகள் நடந்த ஒரு பகுதியாக இந்து சமய புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்த கோயிலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சித்திரங்கள் இந்த கோயிலின் பெருமைகளை எடுத்துக் காட்டுகின்றன. இந்த கோயிலின் மிக முக்கிய அம்சம் இங்கிருக்கும் தொங்கும் தூண்களாகும்.



Click it and Unblock the Notifications