கர்பாரா சத்ரா, திப்ருகாரின் மிகப் பிரபலமானதும், ஏராளமான மக்கள் அடிக்கடி வருகை தரக்கூடியதுமான தின்ஜோய் சத்ராவைக் காட்டிலும் பழமையானதாகக் கருதப்படுகிறது. கர்பாரா சத்ரா ரோஹ்மோரியா மௌஸாவில் அமைந்துள்ளது. நாரிமைதர் என்பவரே இந்த சாத்ராவின் முதல் தலைமை குருக்கள் ஆவார்.
இந்த சத்ரா உள்ளூர்வாசிகளாலும், சுற்றுலாப் பயணிகளாலும் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தாலும், இதன் தற்போதைய இடத்திலிருந்து வேறு இடத்துக்கு இதனை மாற்றி விடலாமா என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மண் அரிப்பு காரணமாக, தற்போதைய இடம் பொருத்தமற்றதாகவும், அபாயகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்த நோக்கில் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
கர்பாரா சத்ரா தவிர்த்து, பல்வேறு சத்ராக்கள் அல்லது சமூகக் கலாச்சார ஸ்தாபனங்கள் திப்ருகார் நகர் முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் பொதுவாக கட்டாயம் சென்று பார்க்க பரிந்துரைக்கப்படும் சத்ராக்களாக தின்ஜோய் சத்ரா, தேஹிங் சத்ரா மற்றும் மோதர்காட் சத்ரா ஆகியவை கூறப்படுகின்றன.
அஹோம் ஆட்சியின் போது நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சத்ராக்கள் ஆன்மீக ஃஸ்தாபன்ங்களாக மட்டுமின்றி அஹோம் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை எடுத்து இயம்பி, வருங்கால சந்ததியினருக்கு கற்பிக்கும் வகையில் செயலாற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications