திப்ருகருக்கு வெகு அருகில் புர்ஹிடிஹிங் நதிக்கரையோரம் அமையப்பெற்றுள்ள நம்பக்கி கிராமம், அதன் இயற்கை அழகுக்காகவும், புத்த மடாலயங்களுக்காகவும் அஸ்ஸாம் மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இந்த கிராமம் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வணிக மையமாக விளங்குவதுடன் அசோகர் தூண், நோங் முங்க்சிரிங்தா, பகோடா போன்ற சுற்றுலாச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்காக பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
அஸ்ஸாம் நகரத்தின் மிகவும் பழமையான எண்ணைக் கிணறு நம்பக்கி கிராமத்தில்தான் அமைந்திருக்கிறது. இந்த கிராமத்தில் தாய் பக்கி எனும் பழங்குடி மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் பக்கி என்ற பழங்குடி மொழியை பயன்படுத்துவதோடு, அவர்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இங்கு போய்-நென்-சீ எனும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications