அசாமின் மேல்பகுதியிலுள்ள டின்சுகியா மாவட்டத்தில் உள்ளது நிலக்கரி ராணி என்றழைக்கப்படும் மார்கரிடா என்ற சிறிய நகரம். இந்த துணைக்கோட்ட நகரம் பச்சை புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களாலும் சூழப்பட்டுள்ளது.
மேலும் இந்நகரத்தின் வித்தியாசமான பெயரின் பின் ஒரு வரலாறு உண்டு. அசாம் ரயில் மற்றும் வியாபார நிறுவனம் இவ்விடத்திற்கு ரயில் வர காரணமாயிருந்ததோடு அவ்வேலைகளை கவனிக்க ராபர்ட்டோ பகனினி என்ற இத்தாலிய பொறியாளரையும் அமர்த்தியது.
அவர் இப்பகுதியில் உள்ள நிலக்கரி நிறைந்த இடங்களுக்கு ரயில் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் பொருட்டு பல பாலங்களை அமைத்தார். அவரது நினைவாக இத்தாலியராணி மார்கரிடாவின் பெயர் இவ்வூருக்கு வழங்கப்பட்டது.
பட்காய் மலைகளாலும், புர்ஹி டெலிங் நதியாலும் சூழப்பட்ட இவ்வூரில் பல சுற்றுலா தளங்கள் உள்ளது. மார்கரிடா கோல்ஃப் மைதானமும், தேயிலை தோட்டங்கலும் பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. ப்ளைவுர் உற்பத்தியிலும் இவ்வூர் சிறந்து விளங்குகிறது.



Click it and Unblock the Notifications