டிக்பாயின் மதிமயக்கும் அழகை இங்கிருந்து காணலாம். டிக்பாயின் முக்கிய சுற்றுலாதளமான இவ்விடம் டிக்பாய்க்கு அருகிலேயே உள்ளது. பறவையின் கோணத்தில் இருந்து ஊரைக் காண்பிப்பதோடு பனி உறைந்த மலை உச்சிகளையும் இங்கிருந்து காண முடிகிறது.
முகட்டு கோணத்திற்கு செல்லும் வழியில் டிக்பாயின் அழகை கண்டுகளிக்கலாம். ஆங்கிலேயர்களின் பாதிப்பை வழியெங்கிலும் காணலாம். முகட்டின் விளிம்பில் இருந்து டிக்பாய் எண்ணைக் கிணற்றையும், கல்லறையையும் காண்பது அருமையான காட்சியாகும்.
குளிர்காலத்தின் ஆரம்பத்திலும் பனி படர்ந்த மலை உச்சிகளை இங்கிருந்து காண்பது இனிமையான காட்சியாகும். எனினும் பயணிகள் வானம் தெளிவாக இருக்கும்போது மட்டுமே இக்காட்சிகளைக் காணமுடியும்.



Click it and Unblock the Notifications