11-வது நூற்றாண்டை சேர்ந்த வாசுகி நாக் கோவில் படேர்வாவில் உள்ள மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். வாசுகி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு சர்ப்பம் (நாகம்) என்று அர்ததம். இந்து மதத்தின் படி, வாசுகி என்ற நாகம், பாம்புகளின் அரசனாகவும், நாகரத்தினத்தை தன் தலையில் வைத்திருக்கும் நாகமாகவும் இருக்கிறது.
ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள பழமையான வாசுகி சிலையை இந்த கோவிலில் காண முடியும். ஒவ்வொரு வருடமும், இந்துக்களின் புனிதப் பயணமான கைலாஷ் யாத்திரைக்கு செல்லும் முன்னர், ஒரு சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் இங்கு நடத்தப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications