Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » த்ராஸ் » ஈர்க்கும் இடங்கள் » த்ராஸ் போர் நினைவுச் சின்னம்

த்ராஸ் போர் நினைவுச் சின்னம், த்ராஸ்

10

பிம்பத் நினைவுச் சின்னம் என்றும் வழங்கப்படும் த்ராஸ் போர் நினைவுச் சின்னம் த்ராஸ் நகரின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும். நகரத்தின் மையப்பகுதியில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கும் இந்த நினைவுச் சின்னம் போரில் உயிர்நீத்த வீரர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் பச்சன் எழுதிய கவிதை ஒன்று நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் போரில் உயிர்நீத்த வீரர்களின் பெயர்களும் சுற்றுலாப் பயணிகள் படிக்கும் வண்ணம் நினைவுச் சின்ன சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

'ஆபரேஷன் விஜய்'யின் வெற்றியைப் போற்றும் வண்ணம் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் நினைவுச் சின்னத்தின் அருகிலேயே இருக்கிறது.

இந்திய வீரர்களின் புகைப்படங்கள், முக்கியமான போர் ஆவணங்கள், பதிவுகள், பாகிஸ்தானிய போர் கருவிகள், உடைகள் என பலதரப்பட்ட பொருள்களை உள்ளடக்கியதாக அந்த அருங்காட்சியகம் திகழ்கிறது. விஜய் என்றால் இந்தியில் வெற்றி என்று பொருள் என்பதால் கார்கில் போருக்கு இந்தியா 'ஆபரேஷன் விஜய்' எனப் பெயரிட்டது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu