Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தும்கா » ஈர்க்கும் இடங்கள் » பாபா பாசுகிநாத் தாம்

பாபா பாசுகிநாத் தாம், தும்கா

20

பாபா பாசுகிநாத் தாம் தும்கா மாவட்டத்திலுள்ள முக்கியமான யாத்திரை ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இது ஹிந்துக்களின் முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது.

ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு நடைபெறும் ஷ்ரவண் மேளா திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் இந்த கோயில் ஸ்தலத்திற்கு விஜயம் செய்கின்றனர். அச்சமயம் வெளிநாட்டுப்பயணிகளையும் இங்கு அதிக அளவில் பார்க்க முடியும்.

புனித கங்கை நீரால் அச்சமயம் இந்த கோயிலில் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. செங்காவி உடையுடன் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருவது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும், தெருக்களில் அங்கப்பிரதட்சணம் செய்தபடி வருவதும் பக்தர்களின் சடங்கு வழக்கமாக பின்பற்றப்படுகிறது. இந்த பாபா பாசுகிநாத் தாம் ஸ்தலத்திற்கு வருகை தரும் ஆன்மீக யாத்ரீகர்கள் தேவகர் எனும் இடத்தில் உள்ள வைத்யநாத் ஜோதிர்லிங்க கோயிலுக்கும் பயணம் மேற்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

விவாஹ் பஞ்சமி அல்லது ராம் ஜானகி விவாக உற்சவம் எனும் திருவிழாவும் இந்த கோயில் ஸ்தலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பாபா பாசுகிநாத் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திருவிழா சடங்கு இன்று வரை தொடர்கிறது.

பால்கி உத்சவ் எனும் மற்றொரு திருவிழாவும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வருடாவருடம் ஏராளமான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த கோயில் ஸ்தலத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

தும்கா-தேவ்கர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த யாத்திரை ஸ்தலம் ஜஸிதிஹ் ரயில் பாதைக்கு அருகில் இருப்பது பயணிகளுக்கு வசதியாக உள்ளது.

பாசுகிநாத் மற்றும் ஜம்தரா ரயில் நிலையங்களில் இறங்கி இந்த ஸ்தலத்திற்கு வரலாம். விமான மார்க்கமாக பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் ராஞ்சி விமானநிலையம் வழியாக இங்கு வரலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue