Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தும்கா » ஈர்க்கும் இடங்கள் » மசான்ஜோர் அணை

மசான்ஜோர் அணை, தும்கா

20

தும்கா நகரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் இந்த மசான்ஜோர் அணை அமைந்துள்ளது. தும்கா-சிருரி சாலையில் அமைந்திருக்கும் இந்த அணைப்பகுதி பேருந்து போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது.

கனடிய நாட்டு கட்டிடக்கலை அம்சங்களின்படி அமைக்கப்பட்டிருப்பதால் கனடா டேம் அல்லது பியர்சன் டேம் என்றும் இந்த அணை அழைக்கப்படுகிறது. 16650 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த அணை 155 அடி உயரத்தையும் 2170 அடி நீளத்தையும் கொண்டுள்ளது.

500,000 கன அடி நீரை இந்த அணைப்பகுதியில் தேக்கமுடியும். இந்த அணைப்பகுதிக்கு அருகிலேயே தில்பாரா எனும் மற்றொரு தடுப்பு அணையும் அமைந்திருக்கிறது. இந்த இடமும் ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த தடுப்பு அணை 1013 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

வாடகை சுற்றுலா வாகனங்கள் மூலம் சுற்றுலாப்பயணிகள் இந்த அணைப்பகுதியை வந்தடையலாம். மலைகள் மற்றும் ஆறு போன்ற ரம்மியமான எழில் அம்சங்கள் நிறைந்திருக்கும் இந்த அணைப்பகுதியில் பல்வேறு பொழுதுபோக்குகளுக்கும் குறைவில்லை.

சுற்றுலாப்பயணிகள் இங்கு நீச்சல் மற்றும் பாறையேற்றம் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபடலாம். தங்குவதற்கு வசதியாக மயூரக்ஷி பவன் பங்களா மற்றும் இன்ஸ்பெக்ஷன் பங்களா போன்றவை இந்த அணைத்தேக்க பகுதியில் அமைந்திருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed