Search
  • Follow NativePlanet
Share

ட்சோங்கு - பழங்குடிகளின் தொன்மையான பூமி!

6

சிக்கிம் மாநிலத்தின் பழங்குடி மக்களாகிய லெப்காக்களின் ஊர் ட்சோங்கு. காங்டாக்கில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில்வடக்கு சிக்கிமில் ட்சோங்கு நகரம் அமைந்து இருக்கிறது. ட்சோங்கு நகரத்தின் பெரும்பாலான நிலப்பகுதிகள் அறியப்படாமலேயே இருக்கின்றன. தனித்துவம் வாய்ந்த தாவரங்களும், விலங்குகளும் நிறைந்த இந்த ட்சோங்குவின் காட்சி அமைப்பு சிக்கிம் சுற்றுலா அனுபவத்தை சுவாரசியமானதாக மாற்றுகின்றது.

ஊர் மக்களோடு கலந்திடுங்கள்!

ட்சோங்குவின் சிறப்பு அம்சம் அதில் வாழும் லெப்கா இன மக்கள் தான். இந்த சமுதாயத்தை சார்ந்த மக்கள் வெளி உலகத்தில் இருந்து தனிமைபடுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வதில் நம்பிக்கை உடையவர்கள்.

ட்சோங்குவின் வழியாக சுற்றுலா செல்லும் அனுபவத்தை இது மேலும் மெருகேற்றுகின்றது. சிக்கிமுக்கு செல்லும் லெப்காக்களின் தனிப்பட்ட பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள ஒவ்வொரு பயணியும் லெப்காக்களோடு வீட்டிலேயே தங்கும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ச்சீ என்னும் பாரம்பரிய லெப்கா பானத்தையும் ருசிபார்க்க மறக்காதீர்கள்.

புவியியல்

ட்சோங்கு கடல் மட்டத்தில் இருந்து 3000-20,000 அடிகளுக்கு மேல் அமைந்திருக்கிறது. கஞ்சன்சங்கா பயோஸ்பியர் சரணாலயத்தை இணைக்கும் இவ்விடத்தில் இருந்து, கஞ்சன்சங்காவை பார்வையிட சிறப்பான இடங்கள் பல இருக்கின்றன.

ட்சோங்குவில் பார்க்க வேண்டிய இடங்கள்

செவன் சிஸ்டர்ஸ் அருவி உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். கிராமத்தின் மேடுகளில் ஏறி ஏழைக்காய் வயல்களுக்கு நடுவே இருக்கும் அழகான சந்துகளில் பயணம் செய்வதை அனுபவியுங்கள்.

டீஸ்டா நதியோரம் மீன்பிடித்து இளைப்பாறி, பாசிங்டம் அருகே உள்ள அழகான மூங்கில் பாலத்தில் நடந்து செல்லுங்கள். உள்ளூரில் விளையும் மூலிகைகள் மூலமாக லெப்காக்கள் அளிக்கும் அழகான சிகிச்சைகளை கற்றுக்கொள்ள மறவாதீர்கள்.

இந்த இடங்கள் அனைத்தும் சிக்கிமுக்கு நீங்கள் செல்லும் சுற்றுலாவை ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாற்றிவிடும்.

ட்சோங்கு சிறப்பு

ட்சோங்கு வானிலை

சிறந்த காலநிலை ட்சோங்கு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ட்சோங்கு

  • சாலை வழியாக
    காங்டாகில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ட்சோங்குவை சாலை வழியாக எளிதில் அடைந்திட முடியும். ட்சோங்குவில் இருந்து காங்டாகிற்கு நல்ல பேருந்து சேவைகள் இருக்கின்றன. தனியார் டாக்சிக்கள் அல்லது பகிர்வு டாக்சிக்கள் மூலமாகவும் இந்த இடத்தை அடையலாம். எனினும், ட்சோங்குவுக்குள் நுழைய சிக்கிம் அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். காங்க்டாக் அல்லது தில்லியில் இருக்கும் சுற்றுலா அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    புதிய ஜால்பாய்குடி ரயில் நிலையமே ட்சோங்குவுக்கு அருகாமையில் இருக்கும் ரயில் நிலையம் ஆகும். இங்கு இருந்து டாக்சி மூலமாக பயணிகள் எளிதாக ட்சோங்குவை அடையலாம். அதோடு காங்டாக் வழியாகவும் ட்சோங்குவை சுலபமாக அடைய முடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மேற்கு வங்காளத்தில் இருக்கும், பாக்டோத்ரா விமான நிலையமே ட்சோங்குவுக்கு அருகாமையில் இருக்கும் விமான நிலையம். விமான நிலையத்தில் இருந்து டாக்சி மூலமாக காங்டாக் அல்லது சிங்தம் வழியாக ட்சோங்குவை அடையலாம். விமான நிலையத்தில் இருந்து ட்சோங்குவை அடைய ஏறத்தாழ ஐந்து மணிநேரம் ஆகும். கோ ஏர், இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஃப்லைட்ஸ் ஆகிய விமானங்கள் பாக்டோத்ரா விமான நிலையத்துக்கு செல்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed