குருத்வாரா ஜோதி ஸரூப் எனப்படும் இந்த குருத்வாரா சிர்ஹிந்த்-சண்டிகர் சாலையில் அமைந்துள்ளது. இது ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவிலேயே இருக்கிறது.
குரு கோபிந்த்சிங்ஜி மற்றும் மாதா குஜ்ரி ஆகியோர் தகனம் செய்யப்பட்ட ஸ்தலத்தின் நினைவு சின்னமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
வாசிர்கான் எனும் சிர்ஹிந்த் ஃபௌஜ்தாருக்கு பயந்து இவர்களை தகனம் செய்வதற்கான இடத்தை அளிக்க யாருமே முன்வராததால், தோடர்மால் எனும் விசுவாசி ஒரு சிறு இடத்தை விவசாயி ஒருவரிடமிருந்து வாங்கி அந்த இடத்தில் குரு மற்றும் அவரது குடும்பத்தார்க்கான தகனக்கிரியைகளை செய்வித்ததாக சொல்லப்படுகிறது.
ஜோதி ஸரூப் குருத்வாராவில் காணப்படும் கம்பீரமான வெண்ணிற கட்டமைப்புகள் இதன் சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications