Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபதேபூர் சிக்ரி » ஈர்க்கும் இடங்கள் » சலிம் சிஸ்டி கல்லறை

சலிம் சிஸ்டி கல்லறை, ஃபதேபூர் சிக்ரி

30

16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சலிம் சிஸ்டியின் கல்லறை பிரம்மாண்டமான, அழகிய கட்டிடமாக விளங்குகிறது. தனக்கு மகன் பிறக்கப் போவதை கணித்த சூஃபீ சந்நியாசியான சலிம் சிஸ்டி என்பவரின் நினைவாக அக்பர் இக்கட்டிடத்தை எழுப்பினார்.

பலநாட்களாக ஒரு மகன் பிறக்க வேண்டி பிரார்த்தனை செய்த அக்பர் இறுதியாக தன் நம்பிக்கையை கைவிடும் சூழ்நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் சலிம் சிஸ்டியின் அருள்வாக்கு கிடைத்தபின் அக்பர் நினைத்தபடியே அவருக்கு மகன் பிறந்தார்.

பிரம்மாண்டமான இந்த வெள்ளைக் கட்டிடம் மதங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் அப்பாற்ப்பட்டு, வாழ்க்கையின் அனைத்து வகுப்பு மக்களையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. சதுர வடிவிலான சலைவைக் கட்டிடமான இது இந்திய முகலாய கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது.

ஜனானா ரெளஜாவுக்கு அருகில் இருக்கும் இக்கட்டிடம் புலந்த் தர்வாஜாவை நோக்கி நிற்கிறது. இதில் உள்ள சமாதி உயர்த்தப்பட்ட மேடையில் ஐந்து படிகள் ஏறி அடையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை அரைவட்ட கூம்பு கொண்ட கல்லறை பிரதான அறையின் நடுவே அமைந்துள்ளது. 

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 May,Tue
Return On
13 May,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 May,Tue
Check Out
13 May,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 May,Tue
Return On
13 May,Wed