Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோகர்ணா » வானிலை

கோகர்ணா வானிலை

அக்டோபரிலிருந்து மார்ச் வரை உள்ள காலமே கோகர்ணாவுக்கு விஜயம் செய்ய சிறந்த காலமாக உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): கோடைக்காலத்தில் கோகர்ணாப்பகுதி மிகுந்த வெப்பத்துடன் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 40° C வரை காணப்படுகிறது. இருப்பினும் இரவில் வெப்பநிலை மிகவும் குறைந்து 18° C என்ற அளவில் மட்டுமே காணப்படும். பொதுவாக கோடைக்காலத்தில் பயணிகள் கோகர்ணாவுக்கு விஜயம் செய்வதை தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) :  கோகர்ணா பிரதேசம் மழைக்காலத்தில் மிக அதிக மழைப்பொழிவை பெறுவதால் அச்சமயம் இங்கு வெளியில் செல்வதே சிரமமாய் இருக்கும். கடற்கரைப்பகுதியில் நீந்துவதோ அருகில் செல்வதோ ஆபத்தானது என்பதால் மழைக்காலத்திலும் பயணிகள் கோகர்ணாவுக்கு செல்ல விரும்புவதில்லை.

குளிர்காலம்

(செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை) : கோகர்ணாவின் சீதோஷ்ணநிலை குளிர்காலத்தின்போது மிகவும் விரும்பத்தக்கதாக இனிமையான சூழலுடன் காணப்படுகிறது. இரவில் வெப்பநிலை 14° C வரை குறைந்தும் பகலில் அதிகபட்சமாக 32° C என்ற அளவிலும் காணப்படும். எனவே குளிர்காலம் பயணிகளை அதிக அளவில் பயணிகளை கோகர்ணாவுக்கு ஈர்க்கின்றது.