கோரக்நாத் கோயில் கோரக்பூரின் மிகவும் பிரபலமான கோவில் ஆகும். இது நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் கோரக்நாத் என்கிற முனிவர் தவம் புரிந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இது கோரக்நாத்தின் சீடர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் மிகப் பிரம்மாண்டமாக 52 ஏக்கர் பரப்பளவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலின் முக்கிய அம்சமாக இதன் கர்பகிரகத்தில் கோகர்நாத் முனிவர், சிவனின் அம்சமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோவிலுக்கு மிக அருகில் மானஸரோவர் என்கிற குளம் உள்ளது. இந்த குளத்தில் பக்தர்கள் படகு சவாரி செய்து பொழுதை கழிக்கலாம் அல்லது குளத்தினருகே தியானம் புரியலாம்.
இங்கு ஜனவரி 14 ம் தேதி தொடங்கி ஒரு மாதம் வரை "மகர சங்கராந்தி மேளா" கொண்டாடப்படுகிறது. அப்போது வழங்கப்படும் உணவு பல லட்சம் சுற்றுலா பயணிகளை கவர்கிறது.



Click it and Unblock the Notifications