குல்மார்க்கிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது டிரங்க் என்னும் சுற்றுலாததலம். அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடம் ஒருநாள் சிற்றுலாக்களுக்கு ஏற்ற இடமாகும்.
இங்கு வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகள், இவ்விடத்தின் கண்கவரும் இயற்கை எழிலை கண்டு இன்புறுவதோடு, ஏரிகளில் மீன்பிடித்தும், மலைகளில் ஏறியும் மகிழலாம்.
தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இங்குள்ள ஒரு பழங்காலக் கோவிலின் சிதைவுகளை ஆராயலாம். இங்குள்ள ஒரு சிகரத்தில் ஏறி பாண்டவர்களது கோவில் எனக்கருதப்படும் ஒரு நினைவுச்சின்னத்தை அடையலாம்.
இப்பகுதியில் அதிக நாட்கள் தங்கி இன்புற எண்ணும் சுற்றுலாப்பயணிகள், இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தங்க்மார்க் என்னும் இடத்தில் உள்ள ஓட்டல்களில் தங்கிக்கொள்ளலாம். தங்க்மார்க்கிலிருந்து மலைச்சரிவுகளில் கீழிறங்கினால், ஃபெரோஸ்பூர் நீரோடையைக் காணலாம்.



Click it and Unblock the Notifications