குல்மார்க்கிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஃபெரோஸ்பூர் சிகரத்திலிருந்து உற்பத்தியாகும் மலை நீரோடையான ஃபெரோஸ்பூர் நல்லா சிம்மவாஹினி என்றும் அழைக்கப்படுகிறது.
மீன்பிடித்தலில் ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் இங்கு மீன்பிடித்து மகிழலாம். இங்குள்ள மக்கள் இந்நீரோடையில் வரும் நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். மலையில் வாழும் தேவதைகளினால் இந்த நீர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.
குல்மார்க்கிலுள்ள சுற்றுலா இடங்களில் ஒன்றான வாட்டர்ஸ் மீட் என்னுமிடத்தில் இந்நீரோடையானது பாஹன் என்னும் ஆற்றுடன் கலக்கிறது. இங்கிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும் 3 நாட்கள் பயண நேரத்திலும் உள்ள தோசா மைதான் என்னுமிடத்திற்கு மலையேற்றம் மூலம் செல்வதற்காகவும் சுற்றுலாப்பயணிகள் ஃபெரோஸ்பூர் நல்லாவுக்கு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications