Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குல்மார்க் » ஈர்க்கும் இடங்கள் » கோண்டோலா பயணம்

கோண்டோலா பயணம், குல்மார்க்

54

காஷ்மீர் மாநில அரசாங்கத்தால், பொமகல்ஸ்கை என்னும் பிரெஞ்சு நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும், கேபிள் கார் போன்ற இயக்கமுறைகொண்ட கோண்டோலா பயணமும் குல்மார்க்கிலுள்ள மற்றொரு கவர்ச்சியான அம்சமாகும்.

13500 அடி உயரத்தில்  5 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய இரண்டு தடங்களை சுற்றுலாப்பயணிகள் தேர்ந்தெடுக்கலாம். குல்மார்க்கிலிருந்து காங்க்டூர் வரை ஒன்றும் காங்க்டூரிலிருந்து அபர்வத் வரை ஒன்றுமாக இரண்டு தடங்களில் இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோண்டோலாவிலிருந்து இமயமலைச் சிகரங்களையும், கோண்டோலா கிராமத்தையும் கண்டு ரசிப்பது த்ரில்லான அனுபவமாக இருக்கும்.

காங்க்டூரிலுள்ள கோண்டோலா நிலையம் 3099 மீட்டர் உயரத்திலும், அபர்வத் நிலையம் 3979 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளன. இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பிமகிழும் ஒரு அனுபவமாக கோண்டோலா பயணம் அமைந்துள்ளது.

குல்மார்க்கிலிருந்து காங்க்டூர் வரையான கோண்டோலா தடம் 19 கோபுரங்களைக் கடக்கிறது. இத்தடத்தில் ஒரு மணிநேரத்தில்,  1500 பயணிகள் பிரயாணிக்க முடியும். காங்க்டூரிலிருந்து அபர்வத் வரையான தடமும் 19 கோபுரங்களைக் கடக்கிறது.  இத்தடத்தில் ஒரு மணிநேரத்தில்,  600  பயணிகள் மட்டும் பிரயாணிக்க முடியும்.

காங்க்டூரிலிருந்து அபர்வத் வரையான இரண்டாவது தடம்தான் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஏனெனில், இத்தட்த்தில், இமயமலையின் கவினுறு காட்சிகளைக் கண்டு இன்புறமுடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Jun,Sat
Check Out
21 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun