பீர்பஞ்சால் மலைத்தொடர்களின் கீழ்ச்சரிவில் குல்மார்க்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தங்க்மார்க் என்னும் இடம். பிரபலமான சுற்றுலாத்தலங்களான குல்மார்க், ஜண்ட்பால், டிரங்க், நிங்கல் நல்லா, பாதர்கூட், கோகல்தாரா, பாபராஷி, போன்றவை தங்க்மார்க் பகுதியில் அமைந்துள்ளன.
குறிப்பிடத்தக்க சுற்றுலா இடங்களான, வாட்டர் மீட், ஃபெரோஸ்பூர் நல்லா, பாபா ரிஷி சமாதி ஆகியவை இவ்விடத்தின் அருகாமையில்தான் உள்ளன.
அடர்ந்த காடுகள், உயர்ந்த குன்றுகள், கண்ணாடி போன்ற தெளிவான நீரூற்றுக்கள், வெள்ளிப்பனிபடர்ந்த மலைத்தொடர்கள் ஆகியவை இப்பகுதியின் குறிப்பிடத்தக்க அம்சங்கள். இங்குள்ள மக்களின் கலைத்திறன் மற்றும் கைத்தொழிலுக்கும் இவ்விடம் புகழ்பெற்றது.



Click it and Unblock the Notifications