மார்வாரிலிருந்து குவாலியருக்கு வருகை புரிந்து குவாலியரில் தங்கியிருந்த ஒரு மகான் குவாஜா கானூன் சாஹிப் அவர்கள். அவர் குவாலியரிலேயே காலமானார். அவரது நினைவாக தர்ஹா குவாஜா கானூன் சாஹிப் இங்கு கட்டப்பட்டுள்ளது.
இங்குள்ள மக்களின் நம்பிக்கையின்படி, இத் தர்ஹாவிற்கு 40 நாட்கள் வந்து வழிபட்டால், விரும்பியது நிறைவேறுமாம். ஆண்டு முழுதும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டவண்ணம் உள்ளனர்.
குவாஜா கானூன் சாஹிப் அவர்கள் மேன்மை பொருந்திய சூஃபி துறவியாவார். இஸ்லாமிய நாட்காட்டியின் 940 ஆவது ஹிஜ்ரி ஆண்டில் அவர் காலமானார்.



Click it and Unblock the Notifications