ஜெய் விலாஸ் அரண்மனையானது சிந்திய வம்சத்தினரின் இருப்பிடமாகத் இருந்து வந்தது. தற்போதும் அவர்களது இருப்பிடமாகத் திகழ்கிறது. இவ்வரண்மனையின் ஒரு பகுதி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
1809-ஆம் ஆண்டில் ஜியாஜி ராவ் சிதியாவினால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. லெப்டினன்ட் கர்னல். சர் மைக்கேல் ஃப்ளோஸ் என்பவர் இதன் வடிவமைப்பாளர் ஆவார். இத்தாலிய, டஸ்கன் மற்றும் கொரிந்திய கட்டிடக்கலை நுணுக்கங்களின் கலவையாக இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது.
சிந்தியாக்களின் பல அபூர்வ பொருள்களும், ஆவணங்களும், ஔரங்கசீப் மற்றும் ஷாஜஹான் ஆகியோர் பயன்படுத்திய வாள்கள் போன்ற அரிய பொருள்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இத்தாலி மற்றும் ஃப்ரான்ஸிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிய பொருள்கள், கலைப்படைப்புகள் மற்றும் கலை நுணுக்கம் பொருந்திய பாத்திரங்கள் ஆகியவையும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பல டன் எடை கொண்ட இரண்டு மிகப்பிரம்மாண்டமான பெல்ஜிய சர விளக்குகள் காண்போர் எவரையும் பெரு வியப்பிலாழ்த்தும். வரலாற்று ஆய்வாளர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் பார்வையிட உகந்த இடம் இது.



Click it and Unblock the Notifications