நம் நாட்டைச் சேர்ந்த பல்வேறு புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள் மற்றும் பொருள்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. பல சுவர் ஓவியங்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
"குவாலியர் காரனா" எனப்படும் பல்வேறு இசைக்கலைஞர்களும் ஒருங்கே கூடி இசைக்கும் நிகழ்ச்சி ( இசைச் சங்கமம்) குவாலியரில்தான் முதன்முதலில் தொடங்கியது. பல்வேறு கொடை வள்ளல்களால் ஆதரிக்கப்பட்ட புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பலர் பிறந்த இடம் இதுவாகும்.
புகழ்மிக்க சரோத் இசைவல்லுநர் உஸ்தாத் ஹஃபீஸ் அலிகான் அவர்களுடைய பாரம்பரிய வீடு 'சரோத் கார்' என்னும் பெயரில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. இதனை புகழ்மிக்க சரோத் இசைவல்லுநர் உஸ்தாத் அம்ஜத் அலிகான் அவர்கள் செய்தார்.
இந்நகரத்தின் பண்பாட்டு வரலாற்றின் வளமையை கலா விதிகா எடுத்துரைக்கிறது. கலை மற்றும் இசையின் வரலாறு குறித்து ஆர்வமுள்ளோர் அவசியம் பார்க்கவேண்டிய இடம் இதுவாகும்.



Click it and Unblock the Notifications