சூரிய மந்திர் என்று அழைக்கப்படும் சூரியன் கோவில், சூரியக்கடவுளுக்கு எழுப்பப்பட்ட ஆலயமாகும். மிகச் சமீபத்தில் கட்டப்பட்ட இக்கோவில் மிகவும் பிரபலமடைந்து ஏராளமான பக்தர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறது.
கோனார்க்கிலுள்ள சூரியனார் கோவிலை மாதிரியாக கொண்டு இக்கோவில் கட்டப்பட்டது. கோனார்க் சூரியனார் ஆலயத்தின் கட்டிடக்கலை பாணியில், சிவப்பு நிற மணல் கற்களைக் கொண்டு 1988-ஆம் ஆண்டு ஜி.டி.பிர்லா அவர்களால் கட்டப்பட்டது.
கோவிலின் உள்புறம் வெந்நிற சலவைக்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் இந்து கடவுள்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மாரோர் என்னும் ஊருக்கு அருகில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அழகிய தோட்டத்தினுள் அமைதி ததும்பும் சூழ்நிலையில் இக்கோவில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications