தேலி கா மந்திர் குவாலியர் கோட்டைக்குள்ளேயே அமைந்துள்ளது. இது எண்ணெய் வணிகரின் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது 100 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான கட்டுமானமாகும்.
இதன் கூரையானது திராவிடக் கட்டிடக் கலையம்சத்துடனும், சிற்பங்களும், வேலைப்பாடுகளும் வட இந்திய பாணியிலும் அமைந்துள்ளன. இந்து மற்றும் புத்த மதக் கட்டிடக் கலைநுணுக்கங்கள் கலந்துள்ளன.
குவாலியர் கோட்டை வளாகத்தினுள் காணப்படும் பழமையான கட்டிடம் இதுவாகும். இது 11ஆம் நூற்றாண்டு அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆரம்பத்தில் விஷ்ணு கோவிலாக இருந்து பின்னர் சிவன் கோவிலாக மாற்றப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இக்கோவிலின் உள்ளே அம்மன் சிலை, பாம்பு சிலைகள், காதல் செய்யும் ஜோடிகளின் சிற்பங்கள், கருடன் சிலை ஆகியவை உள்ளன.



Click it and Unblock the Notifications