Search
  • Follow NativePlanet
Share

ஹஃப்லொங் - அஸ்ஸாமின் அழகிய மலைவாசஸ்தலம்!

5

ஹஃப்லொங்கை பற்றி விவரிக்க வேண்டும் எனில் கீழ் கண்ட வாக்கியம் சரியாக இருக்கும். அசாம் மாநிலத்தில் உள்ள மனதை மயக்கும் ஒரே மலைவாசஸ்தலம் ஹஃப்லொங் மட்டுமே!. ஆகவே இது 'கிழக்கு சுவிஸ்ஸர்லாந்து ' என செல்லமாக அழைக்கப்படுகிறது. ஹஃப்லொங்கில் பனி மூடிய சிகரங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது அழகில் சுவிஸ்ஸர்லாந்திற்கு இணையாகக் கருதப்படுகிறது. ஹஃப்லொங், வட சச்சார் மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. மேலும் இது புகழ்பெற்ற பாரக் பள்ளத்தாக்கிற்கு மிக நெருக்கமாக அமையப்பெற்றிருக்கிறது.

ஹஃப்லொங் சுற்றுலா அருகிலுள்ள நகரங்கள் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்களின் கோடை காலத்தை செலவிட சிறந்த இடமாக இருப்பதால் இந்த இடம் அந்தப் பருவத்தில் உயிர்ப்புடன் உள்ளது.

ஹஃப்லொங் உருண்டோடும் மலைகளின் மத்தியில் அமைந்துள்ளது. சுமார் 513 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஹஃப்லொங் குளிர்ந்த அழகிய மற்றும் மிகச் சிறந்த மலைவாசஸ்தலமாக உள்ளது.

இங்கு பாய்ந்து ஓடும் நீர்வீழ்ச்சி, ஆபத்தான நீரோடைகள், ஏராளமான பசுமைகள், இந்த இடத்தை சுற்றி அமைந்துள்ளதால் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த சுற்றுலாவை என்றும் மறக்க முடியாது. ஹஃப்லொங் 'வெள்ளை எறும்பு மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

ஹஃப்லொங்கில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள்

நீங்கள் ஹஃப்லொங்கில் இருக்கும் பொழுது வெறுமனே அழகிய மலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே உங்கள் மனதிற்கு இதம் அளிக்கும். எ

னினும், ஹஃப்லொங் சுற்றுலாவில் ஹஃப்லொங் ஏரி மிக முக்கிய இடம் வகிக்கிறது. மனதை மயக்கும் இந்த ஏரியின் அழகிய காட்சியானது உங்களை மெய் மறக்கச் செய்யும். இங்கு சுற்றுலா வரும் பயணிகள் அருகிலுள்ள மைபோங்கிற்கு செல்லலாம். மைபோங்க் பண்டைய டிமாச கச்சரி அரசர்களின் தலைநகராக விளங்கியது.

ஹஃப்லொங்கை எவ்வாறு சென்றடைவது?

ஹஃப்லொங் அசாமின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சில்சாரில் இருந்து சுமார் 106 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சில்சாரில் இருந்து ஹஃப்லொங்கை அடைய உதவும் முக்கிய சாலை மிகவும் நல்ல நிலையில் உள்ளது.

மேலும் சில்சாரில் இருந்து ஹஃப்லொங்கை சாலை மார்க்கமாக அடைய இரண்டு மணி நேரம் ஆகும். சில்சார் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் விமானம் மற்றும் ரயில் மூலம் நன்றாக இணைக்கப்படுள்ளது.

ஹஃப்லொங் வானிலை

ஹஃப்லொங் ஒரு ஈரமான துணை வெப்பமண்டல காலநிலையைப் பெற்றிருக்கிறது. ஹஃப்லொங்கின் கோடைகாலம் இனிமையானது எனினும் கோடையில் சிறிய அளவில் வெப்பம் நிலவுகிறது. குளிர்காலத்தில் அதிக குளிர் இருக்கும். பருவமழை இந்த மலைவாசஸ்தலத்திற்கு கனிசமான மழையை கொண்டு வருகிறது.

ஹஃப்லொங் சிறப்பு

ஹஃப்லொங் வானிலை

சிறந்த காலநிலை ஹஃப்லொங்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஹஃப்லொங்

  • சாலை வழியாக
    சாலைகளே ஹஃப்லொங்கின் உயிர்நாடி ஆகும். தேசிய நெடுஞ்சாலை 54 மற்றும் 27 இந்த மலைவாசஸ்தலம் வழியாக செல்கிறது. இந்த இரண்டு நெடுங்சாலைகளும் ஹஃப்லொங்கை அசாமின் பிற பகுதிகளுடனும் அண்டை மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்துடன் இணைக்கிறது. இந்த மலைவாசஸ்தலத்திற்கு அருகில் உள்ள மிகப் பெரிய நகரம் சில்சார் ஆகும். கவுகாத்தி இங்கிருந்து சுமார் 299 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்துகள் ஹஃப்லொங்கில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஹஃப்லொங்கில் ஒரு மீட்டர் கேஜ் ரயில் நிலையம், லோயர் ஹஃப்லொங் என்கிற இடத்தில் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு சில்சார், லும்டிங், மைபொங்க் மற்றும் ஜதிங்கா போன்ற இடங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்டுகின்றன. இங்கிருந்து லும்டிங் சுமார் 131 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கவுகாத்தியை இணைக்கும் பல முக்கிய ரயில்கள் லும்டிங்கில் நின்று செல்கின்றன. கவுகாத்தி ரயில் நிலையம் வட கிழக்கு இந்தியாவின் மிக பெரிய ரயில் நிலையம் ஆகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஹஃப்லொங்கிற்கு அருகிலுள்ள விமான நிலையம் `கும்ப்ஹிர்கிராம்' என்கிற இடத்தில் உள்ள சில்சார் விமான நிலையம் ஆகும். ஹஃப்லொங் சில்சாரில் இருந்து சுமார் 108 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சில்சார் விமான நிலையத்திற்கு கவுகாத்தி, திப்ருகார் மற்றும் கொல்கத்தாவில் இருந்து வழக்கமான விமானங்கள் இயக்கப்டுகின்றன. மேலும் இந்த விமானங்கள் தில்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களை சில்சாருடன் இணைக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City