ஹரிஹரேஷ்வர் நகரத்திலிருந்து 197 கி.மீ தூரத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து எல்லா முக்கிய இந்திய நகரங்களுக்கும் சர்வதேச நகரங்களுக்கும் ஏராளமான விமான சேவைகள் உள்ளன. 3500 ரூபாய் வாடகையில் ஹரிஹரேஷ்வர் வருவதற்கு டாக்சிகளும் கிடைக்கின்றன. அதுதவிர, புனேயில் உள்ள லோஹேகாவ்ன் விமான நிலையம், நாசிக் நகரிலுள்ள காந்தி நகர் விமான நிலையம் மற்றும் கோலாப்பூர் விமான நிலையம் போன்றவையும் ஹரிஹரேஷ்வர் ஸ்தலத்துக்கு அருகில் உள்ள விமான நிலையங்களாக அமைந்துள்ளன. இவை உள்நாட்டு விமான சேவைகளைக்கொண்டுள்ளன.