Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹரிஹரேஷ்வர் » வானிலை

ஹரிஹரேஷ்வர் வானிலை

இயற்கையாக வறண்ட வெப்பப்பிரதேச சீதோஷ்ணநிலையை கொண்டுள்ள  ஹரிஹரேஷ்வர் பகுதி வெப்பமான கோடைக்காலம், கடுமையான குளிர்காலம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த மழைக்காலம் போன்ற  இயல்புகளைக் கொண்டுள்ளது.  அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள இடைப்பட்ட காலம், இப்பகுதிக்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. ஊர் சுற்றிப்பார்க்கவும், இயற்கையை ரசிக்கவும் ஏற்ற சீதோஷ்ணநிலை இக்காலத்தில் நிலவுகிறது.  

கோடைகாலம்

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் ஹரிஹரேஷ்வர் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலையாக  40°C வரை காணப்படுகிறது.  அதிகபட்ச உஷ்ணத்துடன் உள்ள கோடைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்க வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் ஹரிஹரேஷ்வர் பகுதி தென்மேற்கு பருவக் காற்றுகளின் மூலம் மழையை பெறுகிறது. இக்காலத்தில் மிதமான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது. மேலும், மழைக்காலத்திற்கு பிந்தைய காலத்தில் பயணிகள் பீமாஷங்கருக்கு விஜயம் செய்யலாம். அப்போது இப்பகுதி முழுக்க பசுமையுடன் ரசிக்கக்கூடிய எழிலுடன் காட்சியளிக்கின்றது.

குளிர்காலம்

ஹரிஹரேஷ்வர் பகுதியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இனிமையான குளிர்காலம் நிலவுகிறது. இக்குளிர்காலத்தில் மிகக்குறைந்தபட்ச வெப்பநிலையாக  16°C  வரை குறைந்து காணப்படுகிறது.