Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஜாரிபாக் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ராஜ்ரப்பா

    ஹஜாரிபாகின் முக்கியமான யாத்ரீக தளமாக ராஜ்ரப்பா கருதப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை23ல் உள்ள சின்னமஸ்தா கோவில் சக்திபீடங்களில் ஒன்றாகவும், சின்னமஸ்திகா தெய்வத்தின் தலையற்ற சிலை உள்ள கோவிலாகவும் திகழ்கிறது. தந்த்ரிக் பாணி கட்டிடடக்கலைக்கு பெயர்போன இந்த கோவிலில்...

    + மேலும் படிக்க
  • 02திலையா அணை

    திலையா அணை

    பராகா நதியில் உள்ள திலையா அணை தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் அணையாகும். 1953ல் வெள்ளங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டப்பட்ட இந்த அணையில் நீர்மின்சார நிலையம் ஒன்றும் உள்ளது. இவ்வணையைச் சுற்றியுள்ள இயற்கை காட்சிகள் பயணிகளை மெய்மறக்கச்...

    + மேலும் படிக்க
  • 03சூரஜ்குண்ட்

    வெந்நீர் ஊற்றான சூரஜ் குண்ட் ஹஜாரிபாகில் இருந்து 60கிமீ தொலைவில் உள்ளது. சூர்யா, ராம், லக்‌ஷ்மணா, சீதா, பிரம்மா என ஐந்து இந்துக் கடவுள்களின் பேரில் ஐந்து ஊற்றுகள் இங்கு அமைந்துள்ளன. 169ல் இருந்து 190டிகிரி வரை வெப்பமாக இருக்கும் இந்த நீரில் குளிப்பது பல பல...

    + மேலும் படிக்க
  • 04ஹஜாரிபாக் தேசிய பூங்கா

    ஹஜாரிபாக் தேசிய பூங்கா

    ஹஜாரிபாகில் இருந்து 17 கிமீ தொலைவிலும், ராஞ்சியிலிருந்து 111 தூரத்திலும் இருக்கும் இந்த பூங்காவில் பலவகையான விலங்குகளும், செடிகளும் உள்ளன. யானைகள், புலிகள், வேங்கைகள், புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் இருக்கின்றன.

    அனைத்து வகையான மிருகங்களையும் பயணிகள் காணும்...

    + மேலும் படிக்க
  • 05கனரி மலை

    கனரி மலை

    நகரத்தில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்தில் சிறிய ஏரிகளும் அமைந்துள்ளன. பார்வை கோபுரங்களில் இருந்து இயற்கைக் காட்சிகளைக் காண்பது மறக்கமுடியா அனுபவமாக இருக்கிறது.

    புகழ்பெற்ற தளமான இங்கு வருடம் முழுதும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். புலி மற்றும் மான்...

    + மேலும் படிக்க
  • 06நர்கிஸ்தான் கோவில்

    நர்கிஸ்தான் கோவில்

    ஹஜாரிபாகின் நர்கிஸ்தான் கோவில் நரசிங் என்ற விஷ்ணுவின் அவதாரத்திற்கு   அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கர்பக்கிரகத்தில் உள்ள சிவலிங்கத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். வருடந்தோரும் குடமுழுக்கும் நடத்தப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 07ஹஜாரிபாக் ஏரி

    ஹஜாரிபாகின் மையப்பகுதியில் உள்ள இந்த ஏரியில் படகு சவாரி உள்ளது. சூரிய உதயத்தையும், மறைவையும் இங்கிருந்து ரசிக்கலாம்.

    + மேலும் படிக்க
  • 08இஸ்கோ கிராமம்

    இஸ்கோ கிராமம்

    பாறைசிற்பங்களுக்கு புகழ்பெற்ற இந்த இடம் இடைக் கற்காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்ததாக கண்டுபிடித்திருக்கிறார்கள். 10000வருட பழமையான ஓவியங்களும் இங்கு காட்சிக்கு உள்ளன.

    + மேலும் படிக்க
  • 09சடாஃபார்

    சடாஃபார்

    அகழ்வாராய்ச்சி நிலையமான இங்கு மணற்பாறைகளும், பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. ஏழு முக்கோண பாறைவடிவங்களில் உள்ள ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை.

    புள்ளிமான், கால்நடைகள், வெட்டுக்கிளிகள், தவளைகள் என பலவகையான மிருகங்களின் உருவக்கருத்தியல்களை மையமாக வைத்து...

    + மேலும் படிக்க
  • 10ராஜ் தேர்வா

    ராஜ் தேர்வா

    ராஜ் தேர்வா அணை தேசியப் பூங்காவினுள் அமைந்துள்ளது. உள்ளே இருக்கும் காட்டு பங்களாவினுள் சமைப்பதற்குண்டான வசதிகள் உட்பட செய்துதரப்பட்டுள்ளன. நீர் கோபுரம் ஒன்றில் இருந்து இயற்கை காட்சிகளைக் கண்டு களிக்கலாம்.

    + மேலும் படிக்க
  • 11சில்வார் மலை

    சில்வார் மலை

    ஹஜாரிபாகிற்கு அருகில் உள்ள சில்வார் மலையை ஒட்டி ஜகன்னாத் தாம் என்ற கோவில் உள்ளது. ஜகன்னாதரின் கோவிலான இதில் பாலபத்திரர் மற்றும் சுபத்திரையின் சிலைகளும் உள்ளன. ரத யாத்திரையின் போது இங்கு பிரம்மாண்ட திருவிழா அனுஷ்டிக்கப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 12கொனார் அணை

    கொனார் அணை

    தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனத்தால் கட்டப்பட்ட இரண்டாவது அணையான இது பல்உபயோக அணையாக விளங்குகிறது. இயற்கை அழகு நிறைந்த சுற்றுலா தளமான இங்கு அமர்ந்து இயற்கை காட்சிகளை ரசிப்பதை பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue