ஹஜாரிபாகின் முக்கியமான யாத்ரீக தளமாக ராஜ்ரப்பா கருதப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை23ல் உள்ள சின்னமஸ்தா கோவில் சக்திபீடங்களில் ஒன்றாகவும், சின்னமஸ்திகா தெய்வத்தின் தலையற்ற சிலை உள்ள கோவிலாகவும் திகழ்கிறது. தந்த்ரிக் பாணி கட்டிடடக்கலைக்கு பெயர்போன இந்த கோவிலில் விலங்குகள் பலியிடப்படுகின்றன.
சாந்தல் பழங்குடியினருக்கு ராஜ்ரப்பா புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இந்தக் கோவிலுக்கு பிஹார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.
சுற்றுலா தளமாகவும் விளங்கும் இங்கு நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. பெரா மற்றும் தாமோதர் நதிகளால் உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி 30அடி உயரத்தில் இருந்து வருகிறது. இயற்கை அழகையும், பிரம்மாண்டமான பாறை வடிவ உருவங்களை இங்கு காணலாம்.



Click it and Unblock the Notifications