புலிகளின் பிரதான சரணாலயமாக உள்ள சாத்பூரா தேசிய பூங்கா, அதன் மாறுபட்ட வகையான தாவர மற்றும் விலங்கினங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். இந்தியாவில் அதிகம் கவனிக்கப்படாத வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாக இந்த இடம் விளங்குகிறது.
ஆரம்பத்தில் இந்த பூங்கா புலிகள் பாதுகாப்பகமாகவே இருந்து வந்தது. இந்த பூங்காவின் கடினமான தரைப்பகுதிகளில் ஆழமான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் குறுகலான மலைச்சரிவுகள் ஆகியவை உள்ளன.
இந்த பூங்காவில் ஊர்ந்து செல்லும் போது படிவுப்பாறைகளால் உருவான சிகரங்கள், அடர்ந்த சால் மரக்காடுகள் மற்றும் தாவா பாதுகாப்பிடம் ஆகியவற்றைக் நீங்கள் ஆச்சரியமின்றி கண்டிட முடியும்.
இந்த சாத்பூரா தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக புள்ளி மான்கள், முள்ளம்பன்றிகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் சேற்றிலுள்ள முதலைகள் ஆகியவற்றை கண்டிப்பாக காணும் வாய்ப்புகள் கிடைக்கும்.
ப்ளாக் பக் மற்றும் இந்தியாவின் பெரிய அணில் வகைகளை காணும் தனித்தன்மையான வாய்ப்புகளும் இந்த பூங்காவில் கிடைக்கும். இந்த தேசிய பூங்காவில் காண்பதற்கரிய பல்வேறு பறவையினங்களையும் காண முடியும்.
சாத்பூரா தேசிய பூங்காவில் 1300-க்கும் அதிகமாக இருக்கும் தாவர வகைகளில் பெரும்பாலனவை மருத்துவ குணம் வாய்ந்தவையாகும். மத்திய இந்தியாவில் இயற்கை நடைபயணத்திற்கு வாய்ப்பளிக்கும் ஒரே புலிகள் சரணாலயமாக இந்த பூங்கா உள்ளது.
இதன் படி, 4 பேர் கொண்ட குழுவினராக, தகுந்த பயிற்சி பெற்ற பாதுகாப்பு அதிகாரியுடன் இந்த வனப்பகுதிகளில் நடமாடலாம். இந்த பூங்காவிற்கு வருவதற்கு சிறந்த காலமாக ஜனவரி முதல் ஜுன் வரையிலான மாதங்கள் உள்ளன.



Click it and Unblock the Notifications