கல்வாரி மலை, இடுக்கி

இடுக்கியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் கட்டப்பனா – இடுக்கி சாலையில் இந்த கல்வாரி மலை அமைந்துள்ளது. செங்குத்தான சரிவை கொண்டுள்ள இந்த மலை ஒரு பிரசித்தமான சிற்றுலாத்தலமாக விளங்குகிறது.

புனித வெள்ளி மற்றும் நோன்புத்திருநாளின்போது இங்கு நடத்தப்படும் ஊர்வல சடங்கு ஒரு முக்கிய ஆன்மிக திருவிழாவாக பெயர் பெற்றுள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இந்த சடங்கின்போது பக்தர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தின் நினைவாக சிலுவைகளைச் சுமந்தபடியே ஊர்வலம் செல்கின்றனர்.

கல்வாரி மலை மீதிருந்து அருகில் காணப்படும் எல்லா இயற்கைக்காட்சிகளையும் பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம். இங்கிருந்து ஒரு கோணத்தில் பார்த்தால் இடுக்கி அணையையும் ஐயப்பன் கோயிலையும் பார்க்க முடிகிறது. மற்றொரு கோணத்தில் பார்த்தால் காமாக்ஷி மற்றும் மரியாபுரம் கிராமங்களை ரசிக்க முடிகிறது.

மலையேற்றம் மற்றும் பிக்னிக் சிற்றுலாவுக்கு பொருத்தமான ஸ்தலமாக உள்ளதால் கல்வாரி மலை சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. இங்கு மலையேற்றப்பாதை வழியே ஏறும்போது யானைக்கூட்டங்களயும் பார்க்க வாய்ப்புண்டு.

இந்த மலைப்பகுதியில் இதமாக வீசும் காற்றும் பறவைகளின் கீச்சொலியும் உங்கள் கவலைகளை எல்லாம் மறந்து புதிய மனிதராக உணரவைக்கும். அதுமட்டுமன்றி, இரவுத்தங்கலுக்கு வசதியாக இந்த மலையின்மீது குடில்களும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...