Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இடுக்கி » ஈர்க்கும் இடங்கள் » தட்டேக்காட் பறவைகள் சரணாலயம்

தட்டேக்காட் பறவைகள் சரணாலயம், இடுக்கி

35

சலிம் அலி பறவைகள் சரணாலயம் என்றும் அழைக்கப்படும் இந்த தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ளது. பறவை ஆர்வலர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது மிகவும் பிடித்த இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.

பல இந்திய வகை ஊர்வன ஜந்துகளும், விலங்குகளும் இங்கு வசிக்கின்றன. நவம்பர் முதல் ஜுன் மாதம் வரை இங்கு பலவகை புலம்பெயர் பறவைகளும் விஜயம் செய்கின்றன. இவற்றைப்பார்ப்பதற்காகவே இக்காலத்தில் அதிகமான பறவை ஆராய்ச்சியாளர்கள் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

தட்டேக்காட் பறவைகள் சரணாலயத்தில் கிழக்கு வளைகுடா ஆந்தை எனப்படும் ஒரு அழிந்து வரும் ஆந்தை இனம், மலபார் சாம்பல் இருவாட்சி, இளசிவப்பு மூக்கு பனங்காடை, சிவப்பு தொண்டை குக்குறுவான், பாம்புப்பருந்து, இந்திய மலை இருவாட்சி மற்றும் நீலச்சிட்டு போன்ற அரிய வகை பறவைகள் வசிப்பதால் பார்வையாளர்கள் விசேஷமாக இவற்றைத் தேடி வருகின்றனர்.

அரிய பறவை வகைகள் மட்டுமல்லாமல் இங்குள்ள தோல்பதன அருங்காட்சியகம் மற்றும் வனவிலங்கு மறுவாழ்வு மையம் போன்றவற்றுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.

பயணிகளின் வாகனங்களுக்கு இந்த சரணாலயத்தில் அனுமதி இல்லை. உள்ளூர் வழிகாட்டிகளும் இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்த்து ரசிப்பதில் உதவுகின்றனர். தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri