இந்தூரின் புகழ் மிக்க கோவில்களில் ஒன்றான படா கணபதி கோவில், அங்கிருக்கும் மிகப்பெரிய கணபதி அல்லது கணேசரின் சிலைக்காக நன்கு அறியப்பட்டிருக்கிறது. 25 அடி உயரத்திற்கு உள்ள இந்த கணபதி சிலை உலகத்திலேயே மிகப்பெரிய சிலையாக உள்ளது.
இந்த கோவில் 1875-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அவந்திகா என்றழைக்கப்பட்ட உஜ்ஜையினி நகரத்தில் வசித்து வந்த, ஸ்ரீ தாதிச் என்பவரின் கனவில் கணேச பெருமான் வந்ததாகவும், அதனால் உறக்கம் கலைந்து எழுந்த அவர் இந்த சிலையை உருவாக்க முடிவு செய்ததாகவும் கதைகளில் சொல்லப்பட்டுள்ளன.
இந்த சிலையின் உருவாக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். செங்கல், சுண்ணாம்பு பாறைகள், கருப்பட்டி, ஏழு மோட்ச புரிகளில் எடுக்கப்பட்ட மணல், குதிரைகள், பசுக்கள் மற்றும் யானைகளின் கடிவளாங்களிலிருந்து எடுக்கப்பட்ட சேற்று மணல், வைரம், மரகதம், முத்து, மாணிக்கம் மற்றும் புஷ்பராகம் ஆகிய ஐந்து வகை இரத்தினங்களின் தூள் மற்றும் புகழ் பெற்ற புனிதத்தலங்களிலிருந்து எடுக்கப்பட்ட புனித நீர் ஆகியவற்றால் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலையின் உலோக சட்டங்கள் தங்கம், வெள்ளி, பித்தளை, தாமிரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications