Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இந்தூர் » ஈர்க்கும் இடங்கள் » கமலா நேரு பூங்கா

கமலா நேரு பூங்கா, இந்தூர்

28

இந்தூரில் இருக்கும் கமலா நேரு உயிரியல் பூங்கா மிகவும் அறியப்பட்ட சுற்றுலா தலமாகும். இந்த சுற்றுலா தலம் சுமார் 4000 ச.அடி பரப்பளவில் விரிந்திருக்கிறது. உள்ளூர் மக்களால் சிடியா கார் என்ற பெயரில் இந்த பூங்கா அழைக்கப்படுகிறது.

இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த பூங்காவின் ஒரு பகுதியில் கான் ஆறு சலசலத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் பல்வேறு வகையிலான பறவைகள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன.

அவற்றில் வெள்ளை புலிகள் மற்றும் அதன் குட்டிகள் குடும்பமாக சுற்றிக் கொண்டிருப்பது தான் மிகவும் சிறந்த காட்சியாக இருக்கும். இங்கிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்களின் இனப்பெருக்கம் இயற்கையான சூழலில் நடப்பதற்கு பொறுப்பான இடமாக இந்த பூங்கா விளங்குகிறது.

குதிரை சவாரிகள், யானை சவாரிகள் மற்றும் ஒட்டக சவாரிகள் ஆகியவையும் இந்த பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்திருக்க ஏற்ற வகையிலான விளையாட்டு இடங்களும் உள்ளன.

இந்த பூங்காவில் நடந்து செல்வதற்கான ஒற்றையடிப்பாதைகளும், அழகிய தோட்டங்களும் கூட உள்ளன. நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் இன்ப சுற்றுலா செல்ல மிகவும் ஏற்ற இடமாக இந்த பூங்கா உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue