Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இந்தூர் » ஈர்க்கும் இடங்கள் » மகாத்மா காந்தி ஹால்

மகாத்மா காந்தி ஹால், இந்தூர்

28

இந்தூரின் அடையாளமாக விளங்கும் இடங்களில் ஒன்றாக மகாத்மா காந்தி ஹால் உள்ளது. 1904-ம் ஆண்டில் கட்டப்பட்ட போது, கிங் எட்வர்டு ஹால் என்ற பெயரில் இது அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர், 1948-ம் ஆண்டு முதல் இந்த இடம் மகாத்மா காந்தி ஹால் என்று அழைக்கப்படத் துவங்கியது.

பம்பாயைச் சேர்ந்த சார்லஸ் பிரடெரிக் ஸ்டீவன்ஸ் என்பவரால் இந்தோ-கோதிக் கட்டிடக்கலையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த பொதுக்கூடம் ஒரு கட்டிடக்கலை அற்புதமாக நிமிர்ந்து நிற்கிறது.

இந்த கூடத்தில் இருக்கும் கடிகார கோபுரம் இதன் முக்கியமான பார்வையிடமாக உள்ளது. வட்ட வடிவ கூரையுடன், நான்கு பக்கங்களிலும் கடிகாரம் இருக்குமாறு இந்த பொதுக்கூடத்தின் மையத்தில் இந்த கடிகார கோபுரம் கட்டப் பட்டுள்ளது.

உள்ளூர் மக்களால் 'கடிகார கோபுரம்' அல்லது 'காந்த ஹார்' என்ற பெயரில் இந்த ஹால் அழைக்கப்படுகிறது. சமதளமான மற்றும் உயரமான கூரை, அலங்கரிக்கப்பட்ட இணைப்புகள், அறைகலன்களால் அழகுற நிரப்பப்பட்டுள்ள அறைகளை, கோபுரங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கும் அம்சமாக உள்ளன.

இங்கிருக்கும் விசாலமான கூடத்தில் சுமார் 2000 பேர் இருக்க முடியும். மேலும், இந்த கூடத்தில் ஒரு குழந்தைகள் பூங்கா மற்றும் நூலகம் ஆகியவையும் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu