Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இந்தூர் » ஈர்க்கும் இடங்கள் » பாதாள் பானி

பாதாள் பானி, இந்தூர்

28

இந்தூர் நகரத்திலிருந்து 36 கிமீ தொலைவில் அமைந்துள்ள 300 அடி உயரமுள்ள அற்புதமான நீர்வீழ்ச்சி தான் பாதாள் பானி! இந்நீர்வீழ்ச்சியின் உயரம் 300 அடியாக இருந்தாலும், இந்த தண்ணீர் விழுந்து கீழே உருவாகியுள்ள பள்ளத்தின் அளவு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

புராணக்கதைகளில் இந்நீர்வீழ்ச்சி பூமியின் அடிப்பகுதி வரையிலும் நீண்டு செல்கிறது என்று பொருள் படும் வகையில் 'பாதாள்' என்று அழைக்கப்பட்டு இப்பொழுதைய பெயரையும் பெற்றிருக்கிறது.

வெப்பமான கோடைக்காலங்களில் இந்நீர்வீழ்ச்சி முழுமையாக வறண்டு விடும். அந்த சமயத்தில் இந்நீர்வீழ்ச்சியை உருவாக்கும் ஓடையானது, சிறு சிறு துளியாக வடிந்து கொண்டிருக்கும்.

ஆனால், மழைக்காலத்தின் முடிவில் இந்நீர்வீழ்ச்சி அதன் முழுமையான பரிணாமத்தை எடுத்து விடும். ஜுலை மாதத்தில் இந்நீர்வீழ்ச்சியின் தண்ணீர் முழுமையான வேகத்தில் விழத் தொடங்கும் போது இந்நீர்வீழ்ச்சி புகழ் பெற்ற இன்ப சுற்றுலா தலமாகவும் மற்றும் மலையேற்றம் செய்ய மிகவும் ஏற்ற இடமாகவும் இருக்கும்.

எனினும், மழைக்காலம் உச்சத்திலிருக்கும் போது அபரிமிதமான வெள்ளம் விழுவதால் இந்த நீர்வீழ்ச்சியை அந்த பருவத்தில் நெருங்கிச் செல்வது மிகவும் அபாயகரமானதாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed