குவஹாத்தி நகரத்திலிருந்து இட்டாநகர் வருவதற்கு ஹெலிகாப்டர் விமான சேவைகள் கிடைக்கின்றன. பவான் ஹான்ஸ் நிறுவனத்தின் இந்த சேவைகள் குவஹாட்டியிலிருந்து நாகர்லாகுன் எனும் இடம் வரை இயக்கப்படுகின்றன. இந்த இடம் இட்டாநகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. தற்போது பபும்பரே மாவட்டத்திலுள்ள ஹோலோங்கி நகரத்தில் ஒரு விமான நிலையம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இது பூர்த்தியடையும்போது இட்டாநகருக்கு வருவது இன்னும் சுலபமாக இருக்கும். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள தேஜ்பூர் மற்றும் லீலாபரி போன்ற விமான நிலையங்கள் வழியாகவும் பயணிகள் இடாநகர் வரலாம். இட்டாநகரிலிருந்து 71 கி.மீ தூரத்தில் லீலாபரி உள்ளது.