Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இட்டாநகர் » வானிலை

இட்டாநகர் வானிலை

கடல் மட்டத்திலிர்ந்து 350 மீ உயரத்தில் இட்டாநகர் அமைந்துள்ளது. மலைப்பிரதேச  பருவநிலையை கொண்டிருப்பதால் மிதமான சூழலையே எப்போதும் கொண்டிருக்கிறது. வருடத்தின் எந்த மாதத்திலும் இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம்.

கோடைகாலம்

இட்டாநகர்  பகுதியில் மே முதல் ஜூன் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. மிதமான சூழல் நிலவும் இக்காலத்தில் சில சமயம் அதிக வெப்பநிலை நிலவுகிறது. இருப்பினும் இமயமலைப்பகுதியிலிருந்து வீசும் காற்றுகள் வெப்பத்தை வெகுவாக தணித்துவிடுகின்றன.  

மழைக்காலம்

ஜுலை மாதம் துவங்கி செப்டம்பர் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. ஜுன் மாதத்தின் இறுதியிலேயே சில சமயம் மழைக்காலம் ஆரம்பித்துவிடுகிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தின்போது இட்டாநகர் பகுதி குளுமையான சூழலுடன் காட்சியளிக்கிறது.  சுற்றுலா அம்சங்கள் மற்றும் இயற்கை எழிற்காட்சிகளை பார்த்து ரசிக்க  குளிர்காலம் மிகவும் ஏற்றது.