போதி மாதா மந்திர் என்பது இடார்ஸியில் உள்ள பிரபலமான கோவில் அகும். இடர்ஸியில் உள்ள பல புகழ்பெற்ற மதத் தளங்களில் இதுவும் ஒன்றாகும். ஒரு யாத்திரைத் தலமான இந்த கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் யாத்திரை வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் இந்த புகழ்பெற்ற கோயிலை தரிசிப்பதற்காக இந்த கோவிலுக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இடார்ஸி அதன் வணிக நிறுவனங்களைப் போன்றே மத அடையாளங்களுக்கும் புகழ் பெற்றது.
அதற்கு போதி மாதா கோவில் ஒரு சாட்சியாக நிற்கிறது. ஒரு அழகான பகுதியில் அழகான பச்சை தாவரங்கள் உள்ளடக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலின் காட்சியானது நமது மனதை விட்டு என்றும் அகலாது.
இந்த கோவிலின் வெள்ளை நிறச் சுவர்கள் சூரிய கதிர்களின் ஆதிக்கத்தில் ஜொலிக்கும் காட்சி நம்முடைய மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தருகிறது.
பக்தர்கள் இங்கு உறையும் தெய்வத்தின் மீது பெரும் நம்பிக்கையையும் பக்தியையும் கொண்டிருக்கிறார்கள். இந்த கோவிலை எளிதாக இடார்ஸி ரயில் நிலையத்தில் இருந்து அடையலாம்.



Click it and Unblock the Notifications