ஹுஸைனி மஜ்ஜித் இடார்ஸியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மசூதி ஆகும். இந்த சிறிய நகரத்து மக்கள் வேற்றுமையிலும் ஒற்றுமை என்கிற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டு ஒன்றுபட்டு ஒரு குழுவாக வசிக்கின்றனர்.
அதனாலேயே இடார்ஸியில் அனைத்து மதம் மற்றும் பல சமூக மக்கள் மகிழ்ச்சியுடன் இணைந்து ஒரே இடத்தில் வாழ்கின்றனர். இடார்ஸியில் இஸ்லாமிய மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே இங்கு சில குறிப்பிடத் தக்க மசூதிகளும் உள்ளன. அவற்றுள் நூரானி மஜ்ஜித் , ஹுஸைனி மஜ்ஜித் , மஜ்ஜித் ஹபிபையா பார்கடெ ராஸா போன்றவை மிக முக்கியமானவை.
இவற்றுள் ஹுஸைனி மஜ்ஜித் இஸ்லாமிய மக்களுக்கு மிகப் புனிதமானது. இந்த மசூதி அற்புதமான கட்டமைப்பு, வடிவமைப்பு மற்றும் அழகிய வேலைப்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
மிகத் திரளான மக்கள் இந்த மசூதியில் நடைபெறும் பிரார்த்தனையில் வழக்கமாக கலந்து கொள்கின்றனர். இடார்ஸிக்கு வருகை தரும் பயணிகள் இந்த மசூதிக்கும் தவறாமல் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் பொது போக்குவரத்து சாதனங்களைப் பயன் படுத்தில் இந்த மசூதியை எளிதில் அடையலாம்.



Click it and Unblock the Notifications