டாவா அணை, டாவா மற்றும் டென்வா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த மிகப் பெரிய அணையை கட்டி முடிக்க சுமார் இருபது ஆண்டுகள் பிடித்தது. இந்த அணையின் கட்டுமானம் 1958ல் தொடங்கி 1978 ம் ஆண்டு முடிவடைந்தது.
இந்த அணை ஹோஷங்காபாத் மற்றும் ஹர்தா மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை வழங்குகிறது. ஆகவே இந்த அணை இந்த இரு மாவட்டங்களின் நீர்த்தேவையை பெருமளவில் தீர்த்து வைக்கிறது.
டாவா அணை இயற்கை அழகுடன் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறந்த சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது. தண்ணீர் நிறைந்து பசுமையுடன் காணப்படும் இந்த அணை இடார்ஸி சுற்றுலாவில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அணைக்கு அருகே உள்ள அமைதியான சூழ்நிலை இந்த அணையின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. டாவா அணையை இடார்ஸி மற்றும் போபாலில் இருந்து எளிதில் அடையலாம்.
இந்த அணை நர்மதா பள்ளத்தாக்கு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அணைகளில் மூன்றாவது பெரிய அணையாகும். இந்த அணை அருகே பல்வேறு சாகச மலையேறும் இடங்கள் உள்ளன. எனவே இது ஒரு மிகப் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications