ஜபல்பூர் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தூம்னா இயற்கை சரணாலயம், இயற்கை மற்றும் விலங்குகள் மேல் அபிமானம் கொண்டோருக்கு அழைப்பு விடுக்குமாறு அமைந்துள்ளது.
தூம்னா விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த இடம் சுமார் 1058 ஹெக்டேர் பரப்பளவுடன் காணப்படுகிறது. இந்த காட்டுக்குள் நடைப்பயணம் மேற்கொள்ளும்போது, ஏராளமான காட்டு விலங்குகள் கண்ணில் தென்படுகின்றன.
ஆனால், அவ்வாறு நடைப்பயணம் மேற்கொள்ள, காட்டிலாகா அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். ஏராளமான பறவையினங்களோடு, மான்கள், காட்டுப் பன்றிகள், குள்ள நரிகள், புள்ளி மான்கள் போன்ற விலங்குகளையும் இக்காட்டில் இனங்காணலாம்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய இந்த சரணாலயம், குடும்பச் சுற்றுலாக்களுக்கும், உல்லாசப் பயணங்களுக்கும் மிகவும் ஏற்றதொரு இடமாகும்.
இதனை இன்னும் மேம்படுத்தும் நோக்கில், மத்தியப்பிரதேச அரசாங்கம் மலையேற்றம், மீன்பிடிப்பு மற்றும் காட்டில் கூடாரமிடுதல் போன்ற பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், தூம்னா ஏரியில் நீச்சலடிப்பது கட்டாயமாக தடை செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications