மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள மதன் மஹால், 11 ஆம் நூற்றாண்டு ஏடியில் ஜபல்பூரை மிக நீண்ட காலம் ஆண்ட ஆட்சியாளர்களின் வாழ்க்கை முறைகளின் சாட்சியாக நிற்கின்றது. நகரத்திலிருந்து சில கி.மீ. தொலைவில், மலையுச்சியில் அமைந்துள்ள மதன் மஹால், ராஜா மதன் சிங் என்ற மன்னரால் கட்டப்பட்டுள்ளது.
சர்வ வல்லமை பொருந்திய கோண்ட் ஆட்சியாளராக விளங்கியவரும், ராஜாவின் தாயாருமாகிய ராணி துர்காவதியுடனும் தொடர்புடையது இக்கோட்டை.
தற்போது சிதிலமடைந்து காணப்படும் இக்கோட்டை, ராணி துர்காவதியின் புகழ் வெளிச்சத்தையும், வலுவான தளவாடங்களைக் கொண்டு விளங்கிய அவர்தம் நிர்வாகம் மற்றும் போர்ப்படைகளைப் பற்றியும் பறை சாற்றுகின்றது.
அரச குடும்பத்தினரின் பிரதான அந்தப்புரம், போர் அறைகள், சிறிய நீர்த்தேக்கம் மற்றும் குதிரை லாயம் ஆகியவை இங்கு கட்டாயமாக பார்த்து ரசிக்க வேண்டியவைகளாகும்.
கடந்து போன யுகத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலைப் பற்றி பக்கம் பக்கமாகப் பேசும் இக்கோட்டை, அக்காலத்தில் இருந்த ஈடுஇணையற்ற ராஜ பரிபாலனத்தை அளவிடுவதற்கும் உதவுகின்றது.
நிச்சயமாக, மதன் மஹால் கோட்டை, இந்தியாவின் பழங்காலக் கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது. ஜபல்பூர் செல்வோர், மதன் மஹாலுக்கு கட்டாயம் சென்று வர பரிந்துரைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications