Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜபல்பூர் » ஈர்க்கும் இடங்கள் » பிஸான்ஹரி கி மடியா

பிஸான்ஹரி கி மடியா, ஜபல்பூர்

25

பிஸான்ஹரி கி மடியா, திகம்பர ஜைனப் பிரிவினரிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கும் ஒரு யாத்ரீக ஸ்தலமாகும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள, சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஜைனக் கோயில், ஜபல்பூரின் சுற்றுலாத் தலங்களுள் மிக அதிக மக்கள் வருகை தரும் இடமாகவும், அதன் அழகு மற்றும் கட்டுமானக்கலைக்கு மிகவும் புகழ் பெற்றதாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

ஏழ்மையான நிலையில் இருந்த பெண்மணி ஒருவர் புனிதமான ஜைனத்துறவி ஒருவரின் குரலைக் கேட்டதாகவும், அதன் பின்னரே இக்கோயிலைக் கட்டியதாகவும் புராணக்கதை ஒன்று உலவி வருகிறது.

அத்துறவியின் மந்திர வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அப்பெண்மணி இந்த பிரம்மாண்ட கட்டிடத்தைக் கட்டி முடித்துள்ளார். இப்பெண்மணியின் அசாத்தியமான தெய்வ பக்தியையும், திடமான நோக்கத்தையும் மெச்சும் வண்ணம், இவரால்   இக்கோயிலில் பதிக்கப்பட்ட கற்கள், அசைக்கப்படாமல் அதே இடத்திலேயே  இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இவருக்கு அளிக்கக்கூடிய பொருத்தமான கௌரவமாக, இக்கோயில் பிஸான்ஹரி கி மடியா என்று “கையால் இயக்கப்படும் கல்லுரலில் கோதுமை மாவு அரைத்தெடுக்கும் பெண்” என்ற அர்த்தம் தொனிக்குமாறு வழங்கப்பட்டு வருகிறது.

ஜபல்பூரில் அமைந்துள்ள அழகான சுற்றுப்புறத்தைக் கொண்டிருக்கும் இந்த அழகிய ஜைனக் கோயிலுக்கு வருடந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed