Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜபல்பூர் » ஈர்க்கும் இடங்கள் » சங்ராம் சாகர் ஏரி

சங்ராம் சாகர் ஏரி, ஜபல்பூர்

25

சங்ராம் சாகர் ஏரி, ஜபல்பூரின் மற்றொரு முக்கிய ஈர்ப்பாகும். நகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி மற்றும் அதன் அருகில் உள்ள கட்டிடங்கள், கோண்ட் ஆட்சியாளரான சங்ராம் சிங் என்ற மன்னரால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

இடைக்காலத்தைச் சேர்ந்த சில சிறந்த கட்டுமானங்களைக் காட்சிப்படுத்தும் இந்த இடத்தின் அழகு, அதனைச் சூழ்ந்துள்ள ஏரியினால் மேலும் மெருகூட்டப்பட்டுக் காணப்படுகிறது.

சங்ராம் சாகர் ஏரி, நீர்வாழ் விலங்கினங்கள் மற்றும் புலம்பெயர் பறவைகளின் இருப்பிடமாகவும் பிரபலமடைந்துள்ளது. இங்குள்ள நீரின் வெப்பநிலை, மத்திய மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளைச் சேர்ந்த ஊசி வால் வாத்துகள், வாலுடன் கூடிய நீர்ப்பறவைகள், சிவப்பு பட்டையை உடைய ஆண் வாத்து வகைகள் போன்ற சில அரிய வகை புலம் பெயர் பறவையினங்களை ஈர்க்கக்கூடியதாக உள்ளது.

அமைதியான சுற்றுச்சூழலை உடைய சங்ராம் சாகர் ஏரி, அனைத்தையும் மறந்து மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, அமைதி பெறுவதற்கான மிகச் சிறந்த இடமாகும். இயற்கை அழகோடு கூடிய அமைதியான சுற்றுச்சூழலை விரும்புவோருக்கு சங்ராம் சாகர் சிறப்பான தேர்வாக பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், இயற்கையை படம் பிடிக்கும் கலையில் விருப்பம் உடையோரின் பயணநிரலில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு இடமாகவும் இது விளங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed