ஜாகேஷ்வர் கோவில் அமைந்துள்ள இடத்தில் சிறிது உயரமான பகுதியில் அமைந்துள்ள தண்டேஷ்வர் கோவில் சிறிது சிதிலமடைந்து காணப்படுகின்றது. ஜாகேஷ்வர் கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் சிவலிங்கத்திலிருந்து மாறுப்பட்டு இத்தலத்தின் சிவ லிங்கம் இயற்கையான கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அழகிய பழங்காலப் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இக்கோவில் வளாகத்தின் நுழைவாயிலில் உள்ள பெரிய இரும்பு மணி இக்கோவிலுக்கு கூடுதல் அழகைத் தருகின்றது. மேலும், இங்கு 18 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட நர்த்தன சிவன் சிலை காணவேண்டிய ஒன்று.



Click it and Unblock the Notifications