Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெயின்டியா மலைகள் » ஈர்க்கும் இடங்கள் » தாட்லஸ்கெய்ன் ஏரி

தாட்லஸ்கெய்ன் ஏரி, ஜெயின்டியா மலைகள்

31

ஜெயின்டியா மலைகளில் உள்ளவர்களிடமும் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளிடமும் தாட்லஸ்கெய்ன் ஏரி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது.

இந்த பகுதியை ஆண்டு வந்த ஜெயின்டியாபூர் அரசரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டாக சஜ்ஜார் நியாங்லி கிராமத்தைச் சேர்ந்த 290 வகையான பழங்குடியினத்தவர்கள் தங்களுடைய அம்புகளின் முனைகளைக் கொண்டு இந்த ஏரியைத் தோண்டியதாக கதைகளில் சொல்லப்பட்டுள்ளது.

இன்றும் கூட, ரெய்ட் முக்காலா பழங்குடியினத்தவர்கள் இந்த ஏரியை வணங்கியும் மற்றும் சடங்குகளை செய்தும் வருகின்றனர்.

வரலாற்று சிறப்பு மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சவாரி, இன்ப சுற்றுலா மற்றும் சுற்றிப் பார்க்க ஏற்ற அழகு ஆகியவற்றைக் கொண்ட ஏரியாக தாட்லஸ்கெய்ன் உள்ளது.

இந்த ஏரியைச் சுற்றிலும் பசும்புல்வெளிகளும், மிண்டு நதியும் உள்ளன. அரிய வகையைச் சேர்ந்த சில ஆர்கிட் மலர்களும் இங்கே காணப்படுகின்றன. இந்த ஏரியின் சுற்றுப்புறங்களில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை காண்பது பிரமிக்க வைக்கும் காட்சியாகவும் மற்றும் இவ்விடம் இயற்கையை விரும்புபவர்களின் சொர்க்கமாகவும் இருக்கும்.

நார்டியாங் செல்லும் வழியில் உள்ள அழகிய பார்வையிடம் தாட்லஸ்கெய்ன் ஏரியாகும். ஒரு மாலைப்பொழுதில், உங்கள் முகத்தில் குளிர் காற்று வீசும் நேரத்தில் இந்த ஏரியில் படகு சவாரி செய்வது உங்கள் சுற்றுலா அனுபவத்தை காலமெல்லாம் நினைத்துப் பார்க்கச் செய்யும்.

ஷில்லாங்கில் இருந்து 58 கிமீ தொலைவிலும் மற்றும் ஜோவாயில் இருந்து 8 கிமீ தொலைவிலுமே தாட்லஸ்கெய்ன் ஏரி அமைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் இருந்து சுற்றுலா வாகனங்களை பதிவு செய்து சுற்றுலாப் பயணிகள் எளிதில் வந்து செல்ல முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed