ஆல்பெர்ட் ஹால் சவாய் ராம் சிங் மஹாராஜாவால் 1886ம் ஆண்டு 4லட்ச ரூபாய் மதிப்பீடு கொண்ட பஞ்ச நிவாரணத் திட்டங்களின் ஒரு அங்கமாக கட்டப்பட்டதாகும். இது ஜெய்ப்பூரிலுள்ள அழகான பூங்காத்தோட்டங்களில் ஒன்றான ராம் நிவாஸ் பாக் எனப்படும் தோட்டத்தினுள் அமைந்துள்ளது.
சர் ஸ்விண்டன் ஜேக்கப் என்பவரால் இந்த ஆல்பர்ட் மாளிகை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த மாளிகையிலுள்ள அருங்காட்சியகத்தில் உலோகச்சிலைகள், ஓவியங்கள், தந்தங்கள், தரைவிரிப்புகள் மற்றும் வண்ணமயமான ஸ்படிகங்கள் போன்ற அற்புதமான சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அருகிலேயே ஒரு விலங்குக்காட்சியகம் மற்றும் ரவீந்த்ர ரங் மஞ்ச் எனப்படும் நாடக சபா மன்றம் ஆகியன அமைந்துள்ளன. ஆல்பர்ட் ஹால் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படுகிறது. நுழைவுக்கட்டணமாக இந்தியப்பயணிகளிடமிருந்து 20 ரூபாயும் வெளி நாட்டு பயணிகளிடமிருந்து 150 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications