ஆம்பேர் கோட்டையானது ராஜ மான் சிங், மிர்ஸா ராஜா ஜெய்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் ஆகிய மன்னர்களால் 200 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நகரம் உருவாவதற்கு முன்பே இந்த ஆம்பேர் எனும் ஸ்தலம் கச்சவாஹா ராஜவம்சத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது.
மூத்தா எனும் ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள் இந்த ஆம்பேர் கோட்டை பல அரண்மனைகள், மண்டபங்கள், சபைக்கூடங்கள், கோயில்கள் மற்றும் நந்தவனங்களை கொண்டுள்ளது.
யானை மீது சவாரி செய்தவாறே சுற்றுலாப்பயணிகள் கோட்டை முழுவதையும் சுற்றிப்பார்க்கும்படியாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஷீலா மாதா தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு உன்னதமான கோயிலையும் இந்த கோட்டைக்குள் பார்க்கலாம்.
திவான்-இ-ஆம், ஷீஸ் மஹால், கணேஷ் போல், சுக் நிவாஸ், ஜஸ் மந்திர், திலராம் பாக் மற்றும் மோஹன் பாரி போன்றவை இந்த கோட்டை வளாகத்துக்குள் உள்ள குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications